Marghazhi 29 Pathigam
composed by S. Subramaniam
29.மார்கழி இருபத்தி
ஒன்பதாம் நாள்
சித்தத்தில் சிவனார் தங்கிட நித்தம் ஒரு பதிகம் பாடுவோம்
கரும்பினை வில்லாக்கி அன்பினை அம்பாக்கி நுன் மீது மன்மதன் எறிந்திட அவனை சுட்டெரிக்க நெற்றிக்கண் திறந்த சிவனார் தாள் போற்றி
முருகனிடம் பிரணவ மந்திரம் கேட்க அவனை தோள் உயர தூக்கி உபதேசம் பெற்று தகப்பன் சாமி யாக்கிய சிவனார் தாள் போற்றி
எருமை வாகனமேறி பக்தன் மார்க்கண்டேயனின் உயிரினை பறிக்க வந்த யமதர்மனை உதைத்து தக்க பாடம் புகட்டிய
சிவனார் தாள் போற்றி
திருநீறு அணியும் நெற்றி தனில் திருமண் அணிந்துவைணவமும் யாம் போற்றுவோம் என சைவ வைணவ பக்தர்களுக்கு கூறும்
சிவனார் தாள் போற்றி
திருக்கரங்களில்திருவோட்டினை ஏந்தி தாய் அன்னபூரணி முன் யாசகம் கேட்டு உணவின் உயர்வினை உலகுக்கு உரைத்த
சிவனார் தாள் போற்றி
பெருமை மிக்க மார்கழி மாதம் இருபத்தி ஒன்பது நின் திருத்தாள்போற்றி
திருச்சிற்றம்பலம் திருத்தாள் போற்றி
ENGLISH VERSION:
Let Lord reside in our minds
Let's keep singing daily his glory
Poem for Margazhi Day # 29
O Lord ! When Manmadaha shot the arrow of cupid from his bow made of sugarcane, you opened your third eye and burned him - My salutations to thy feet.
O Lord! You lifted yong Muruga shoulder high to listen to the Pranava Mantra explanation from him thereby giving him the name Thagappsn Swami (the Father's God). My salutations to thy feet.
O Lord! You taught the God of death, Yama, a lesson by kicking him when he decided to snatch the life of devotee Markandeya against your wishes. My salutations to thy feet.
O Lord! You made an appearance sporting the Sree Choornam (a symbol of Vaishnavism) instead of the usual Vibhuti (symbol of Shaivism) therby pointing it out the devotees of both the sects that Vaishnavism is also acceptable to you. My salutations to thy feet.
O Lord! You appeared before Mata Annapurna holding a begging bowl thereby indicating the importance of food to the people of the world. My salutations to thy feet.
I submit myself at thy feet this day, the 29th Day of the Tamil month Margazhi.
Thiru Chitrambalam Thiru Thaal Potri.
(Salutations to the feet of Lord Nataraja of Chidambaram Temple)
Disclaimer: All matters contained in this article are the property of www.templesofasia.com. The opinions expressed in this article are purely that of the author. The author alone is responsible for the accuracy, authenticity, completeness and validity of all the information in the article.
Comments