Margazhi 22 Pathigam
composed by S. Subramaniam
22.மார்கழி இருபத்தி ரெண்டாம் நாள்
சித்தத்தில் சிவனார் தங்கிட நித்தம் ஒரு பதிகம் பாடுவோம்
பெருமிதத்துடன் உயர்ந்து நிற்கும் சிதம்பர ஸ்தலத்தினில் கனக சபை யாக அருளும் சிவனார் தாள் போற்றி
திருமணக் கோலத்தில் மதுரையில் சொக்கன் வடிவில் வெள்ளி சபை யாக வழங்கும் சிவனார் தாள் போற்றி
அருமை தமிழை போற்றி வளர்க்கும் நெல்லையில் கோவில் தனில் தாமிர சபை யாக வீற்றிருக்கும் சிவனார் தாள் போற்றி
உருவம் முழுதும் ஒளி தரும் இரத்த சிவப்பு வர்ணத்தில், திருவாலங்காட்டில் இரத்ன சபை யாக பவனி வரும் சிவனார் தாள் போற்றி
மெருகுடன் விளங்கும் ஓர் அற்புத ஓவியமாக குற்றாலத்தில் சித்திர சபை யாக காட்சி தரும் சிவனார் தாள் போற்றி
ஒருவரம் கோரினேன் சிவனாரிடம் இன்று - என் உள்ளத்தில் குடிபுகுந்து அதையும் ஆறாவதாக இதய சபை யாக்கிடுவாய் என
இருபத்தி இரண்டு மார்கழி நின் திருத்தாள் போற்றி
திருச்சிற்றம்பலம் திருத்தாள் போற்றி
ENGLISH VERSION:
Let Lord reside in our minds
Let's keep singing daily his glory
Poem for Margazhi Day # 22
O Lord- With pride stands tall the Chidambaram temple where you represent the Kanaka Sabha or the Hall of Gold - I pray before thee
2 O Lord - at the Madurai Meenakshi temple you are seen in marriage posture, you represent the Velli Sabha or the Hall of Silver - I pray before thee
3 O Lord - Thirunelaveli (Nellai) is well known for promoting the lovely Tamil language. Here at the Nellaiappar temple you represent the Tamira Sabha or Hall of Copper - I pray before thee
4 O Lord - Your entire body glitters in bright Red colour (as Reddish as the blood), at the Thiruvalangadu temple you represent the Rathna Sabha or the Hall of Ruby - I pray before thee.
5 O Lord at the Kutralam temple, we get to see a beautiful painting of yours - here you represent the Chithra Sabha or the Hall of drawing / sketch.
6 O Lord - I seek a boon from you this day - I plead you to stay within me and create a new, the Sixth Sabha, the Hridaya Sabha or Hall of Heart.
I submit myself at thy feet this day, the 22nd Day of the Tamil month Margazhi.
Thiru Chitrambalam Thiru Thaal Potri.
(Salutations to the feet of Lord Nataraja of Chidambaram Temple)
Disclaimer: All matters contained in this article are the property of www.templesofasia.com. The opinions expressed in this article are purely that of the author. The author alone is responsible for the accuracy, authenticity, completeness and validity of all the information in the article.
コメント