Margazhi 11 Pathigam
composed by S. Subramaniam
11.மார்கழி பதினோராம் நாள்
சித்தத்தில் சிவனார் தங்கிட நித்தம் ஒரு பதிகம் பாடுவோம்
நதியினை பகீரதன் பூவுலகுக்கு கொணர்ந்திட அதை ஜடையில் தாங்கிய ஓ கங்காதரனே
மதியும் நீ, கதிரும் நீ, சுடரும் நீ, ஒளியும் நீ, புனலும் நீ, தழலும் நீ - அண்டசராசரம் அனைத்தும் நீயே
உதிரமும் நீ, ஊனும் நீ, உயிரும் நீ, மெய்யும் நீ, என்பும் நீ, கதுப்பும் நீ- வாழும் ஜீவராசிகள் அனைத்தும் நீயே
ஆதியும் நீ, அந்தமும் நீ, அகமும் நீ, புறமும் நீ, விண்ணும் நீ, மண்ணும் நீ, ஞாலம் முழுதும் வியாபித்திருப்பதும் நீயே
வேதியர் ஓதும் நுன் பெயர் ஐந்தெழுத்தில் அனைத்தும் அடக்கம் என்பதன் தத்துவமும் நீயே
பதினொன்று மார்கழி நின் திருத்தாள் போற்றி
திருச்சிற்றம்பலம் திருத்தாள் போற்றி
ENGLISH VERSION:
Let Lord reside in our minds
Let's keep singing daily his glory
Poem for Margazhi Day # 11
O Lord Gangadhara, Bhageeratha made a Herculean effort to bring the Ganges to the earth and You got it stored on Your matted hair
O Lord You are the moon, the sun, the star, the light, the fire, the water, you represent everything in this universe
O Lord You are the blood, the flesh, the body, the soul, the bone, the skin you are present in every living organism.
O Lord You are the beginning, the end, the inside, the outside, the earth, the sky You dominate the whole world
O Lord you are the very philosophy that the entire world is contained in the five letters of your holy name (repeatedly) chanted by the Brahmins.
I submit myself at thy feet this day, the 11th Day of the Tamil month Margazhi.
Thiru Chitrambalam Thiru Thaal Potri.
(Salutations to the feet of Lord Nataraja of Chidambaram Temple)
Disclaimer: All matters contained in this article are the property of www.templesofasia.com. The opinions expressed in this article are purely that of the author. The author alone is responsible for the accuracy, authenticity, completeness and validity of all the information in the article.
Comments